12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு, நீதி பரிபாலனத்தின் அனைத்து சட்டக்கதவுகளும் மூடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக், இனியும் மேல் முறையீடு செய்வதற்கு வழி இல்லை என்றாலும், இரண்டாவது முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.
இரண்டாவது மேல் முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்குச் சட்டத்தில் இடம் இல்லை என்றாலும், இவ்வாறு தோல்வி அடைந்தவர்கள், இரண்டாவது மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க முயற்சிக்க முடியும் என்று வழக்கறிஞர் ரமேஷ் என்.பி. சந்திரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சூழலை முன்னிறுத்தி, இத்தகைய விண்ணப்பத்தை நஜீப் சமர்ப்பிக்க முடியும் என்று அந்த வழக்கறிஞர் வாதிடுகிறார்.
எனினும், வலுவான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டே இத்தகைய மேல் முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்குச் சட்டத்தின் நுணுக்கங்களைப் பயன்படுத்த முடியும் என்று வழக்கறிஞர் ரமேஷ் குறிப்பிட்டார்.

Related News

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்


