Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மியன்மார் பிரஜை கருகி மாண்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மியன்மார் பிரஜை கருகி மாண்டார்

மூவார், நவ.8-


ஜோகூர், மூவார், புக்கிட் பக்ரி, ஜாலான் பாடாங்கில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் மியன்மார் பிரஜை ஒருவர் கருகி மாண்டார்.

இந்த விபத்து தொடர்பாக இரவு 8.28 மணியளவில் தீயணைப்பு,மீட்புப்படையினர் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக மூவார் தீயணைப்பு நிலைய கமாண்டர் பஹாருன் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

வீட்டை சோதனையிட்டதில் 26 வயதுடைய அந்த மியன்மார் பிரஜை, ஓர் அறையில் கருகி கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர், கொழுந்து விட்டு எரிந்த தீயின் ஜுவாலைக்கு மத்தியில் தப்பிக்க இயலாமல் கருகி மாண்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பஹாருடின் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →