ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.20-
ஆடவர் ஒருவரை மடக்கி மூவாயிரம் ரிங்கிட் கோரி மிரட்டியதாக கடன் வசூலிப்பாளர்களான இரண்டு சகோதர்கள் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
26 வயது கே. கருணாகரன் மற்றும் 31 வயது கே. கங்காதரன் என்ற அந்த இரு சகோதர்கள், நீதிபதி டத்தோ அஹ்மாட் கமால் அரிஃபின் இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
மூவாயிரம் ரிங்கிட்டை ஒப்படைக்கும்படி 30 வயது நபரை அச்சுறுத்தியதாக அந்த இரு சகோதர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி ஜோகூர், கூலாய், பண்டார் புத்ரா கூலாய், ஜாலான் கெனாரியில் உள்ள ஒரு ஸ்னூக்கர் செண்டரில் இவ்விரு சகோதர்களும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








