Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சென்யார் புயல் வலுவிழுந்தாலும் வானிலை தொடர்ந்து மோசமாக இருக்கும்
தற்போதைய செய்திகள்

சென்யார் புயல் வலுவிழுந்தாலும் வானிலை தொடர்ந்து மோசமாக இருக்கும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.28-

நாட்டைத் தாக்கிய சென்யார் புயல் வலுவிழுந்தாலும் வானிலை தொடர்ந்து மோசமாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் எச்சரித்துள்ளார்.

தீபகற்ப மலேசியாவின் மத்தியில் கடந்து கொண்டு இருக்கும் சென்யார் புயல், தென் சீனக் கடலின் கிழக்குத் திக்கை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. மெட்மலேசியாவின் ராடர் சாதனத்தில் கண்டறியப்பட் தரவுகளின்படி அந்தப் புயல், நேற்று நள்ளிரவு, சிலாங்கூருக்கும், நெகிரி செம்பிலானுக்கும் இடையில் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்தது.

புயல் வலுவிழுந்தாலும் பேரா, சிலாங்கூர் மற்றும் கிழக்கு கரையோர மாநிலங்களில் தொடர்ந்து கடும் மழை பெய்து கொண்டு இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Related News