Dec 3, 2025
Thisaigal NewsYouTube
200 வெள்ளியைப் பெற இன்று முதல் பதியலாம்
தற்போதைய செய்திகள்

200 வெள்ளியைப் பெற இன்று முதல் பதியலாம்

Share:

இன்று திங்கட்கிழமை முதல் இளைஞர்கள் மற்றும் உயர்கல்விக்கூடங்களில் பயில்கின்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் அந்த வயதுக்கு உட்பட்ட தகுதியானவர்களின் கணக்குகளில் 200 வெள்ளி உதவித்தொகை செலுத்தப்படும்.
அரசாங்கத்தின் இதர ரொக்க உதவிகளை பெற்று வருகின்றவர்கள் , தங்கள் கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக இ-பெலியா ராஹ்மா உதவியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு இ-வாலட் தளங்கள் மூலம் 200 வெள்ளி மதிப்பிலான பணத்தைப் பெற இப்போது முதல் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று நிதி அமைச்சருமான அன்வார் கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட இ-வாலட் சேவை வழங்குநர்கள், இத்திட்டக் கால முழுவதும் வவுச்சர்கள், கேஷ்பேக் மற்றும் வெகுமதி புள்ளி தள்ளுபடிகள் வடிவில், கூடுதல் சலுகைகளை வழங்குவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News