Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கைவிடப்பட்ட ரொக்கப்பணத்தின் உரிமையாளரை போலீஸ் தேடுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கைவிடப்பட்ட ரொக்கப்பணத்தின் உரிமையாளரை போலீஸ் தேடுகிறது

குளுவாங், டிச.5-


ஜோகூர், குளுவாங்கில் ரொக்கப்பணம், ஆடவரால் கண்டு பிடிக்கப்பட்ட ரொக்கப்பணத்திற்கான உரிமையாளரை போலீசார் தேடி வருவதாக அதன் மாவட்டத் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அந்தப் பணத்தை கண்டெடுத்த ஆடவர், இது தொடர்பாக போலீசில் புகார் செய்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பணத்தை உரிமைக்கோரி, இதுவரையில் யாரும் வரவில்லை. அதேவேளையில் பணம் காணாமல் போனதாக யாரும் புகார் செய்யவில்லை. பணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ரகசிய கேமராவும் பொருத்தப்படவில்லை என்று ஏசிபி பஹ்ரின் தெரிவித்தார்.

அந்தப் பணத்தின் உரிமையாளரை போலீசாரும் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →