Jun 28, 2026
Thisaigal NewsYouTube
சௌகிட்டில் ஸ்பாவில் 171 ஆண்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: ஏஜிசியின் பதிலுக்காகக் காத்திருக்கிறது போலீஸ்
தற்போதைய செய்திகள்

சௌகிட்டில் ஸ்பாவில் 171 ஆண்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: ஏஜிசியின் பதிலுக்காகக் காத்திருக்கிறது போலீஸ்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.05-

கோலாலம்பூர், சௌகிட் பகுதியில் உள்ள ஒரு SPA (ஸ்பா) மையத்தில் ஓரினப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 208 ஆடவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில், போலீசார், சட்டத்துறை அலுவலகமான ஏஜிசியின் பதிலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையானது, கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி மறுஆய்வுக்காக சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் நேற்று கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி, அந்த ஸ்பா மையத்தில் 17 அரசாங்க ஊழியர்கள் உட்பட கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஆடவர்கள் மீது அரசாங்கம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து தக்கியுடின் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த சைஃபுடின், மேலதிக உத்தரவிற்காக போலீசார் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

Related News