Nov 6, 2025
Thisaigal NewsYouTube
தொழிலாளர் காப்புறுதி முறை மீதான சட்டத் திருத்தத்திற்கு எம்டியுசி வரவேற்பு
தற்போதைய செய்திகள்

தொழிலாளர் காப்புறுதி முறை மீதான சட்டத் திருத்தத்திற்கு எம்டியுசி வரவேற்பு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.06-

நாடாளுமன்றத்தில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்மினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டு தொழிலாளர் காப்புறுதி முறைச் சட்டம் மீதான சட்டத் திருத்த மசோதாவை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான எம்டியுசி வரவேற்றுள்ளது.

நம் நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பு முறையை வலுப்படுத்துவதற்கு இந்த சட்டத் திருத்தம், மேலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும் என்று எம்சியுசியின் தலைவர் டத்தோ அப்துல் ஹாலிம் மன்சோர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் காப்புறுதி முறை வாயிலாக சமூகப் பாதுகாப்பை விரிவுப்படுத்தியிருக்கும் மனித வள அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்கோவின் நடவடிக்கை, வேலையை இழக்கும் சொக்சோ சந்தாதாரர்களுக்கு மிகப் பெரிய அனுகூலத்தை ஏற்படுத்த வல்லதாகும் என்று டத்தோ அப்துல் ஹாலிம் வர்ணித்துள்ளார்.

இந்தக் கூடுதல் அனுகூலத்திற்கு அப்பாற்பட்டு, ஒருவர் வேறு ஓர் இடத்திற்கு மறு வேலை வாய்ப்பைத் தேடிச் சென்று, புதியதாக வேலையைத் தொடங்கும் போது, அவர் அவ்விடத்திற்குச் செல்ல அலவன்ஸ் தொகையும் வழங்க இது வகை செய்கிறது.

தற்போது அதிகரித்து வரும் சவால் நிறைந்த கோரிக்கைகளுக்கு ஏற்ப புதிய இடங்களில் புதிய வேலையைத் தொடங்க இது போன்ற சலுகைகள் தொழிலாளர்களுக்கு செளகரியத்தை ஏற்படுத்தும் என்று டத்தோ அப்துல் ஹாலிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News