Jul 31, 2026
Thisaigal NewsYouTube
5 சந்தேக நபர்களை போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

5 சந்தேக நபர்களை போலீசார் கைது

Share:

வெளிநாட்டு பிரஜையின் மரணம் தொடர்பாக சந்தேகிக்கும் 5 நபர்களை போலீசார் நேற்று கெமாமனில் இருக்கின்ற தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் கைது செய்தனர்.

காலை 8 மணியளவில் இந்த சம்பவ குறித்து மருத்துவ அதிகாரியிடமிருந்து கிடைக்க பெற்ற அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக கெமாமன் காவல்துறை துணைத்தலைவர் வான் முஹமாட் வான் ஜாஃபார் தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பாளராக பணிப்புரியும் அந்நபர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருந்ததால் கெமாமன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக வான் முஹமாட் கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 40 வயதிற்கு உட்பட்ட மூன்று மியான்மார், ஒரு சீன, ஒரு மலேசிய பிரஜைகளாவர் என்று வான் முஹமாட் விவரித்தார். குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News