நாட்டின் எட்டாவது பிரதமராக பொறுப்பு வகித்த போது ஜானா விபவா நிதித் திட்டத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக 4 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து டான்ஸ்ரீ முகைதீன் யாசின் விடுதலை செய்யப்பட்டதைத் எதிர்த்து அரசு தரப்பு வழக்கறிஞர், புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மேல்முறையீடு மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28,29 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என்று அப்பீல் நீதிமன்றம் இன்று விசாரணை தேதிகளை நிர்ணயித்துள்ளது.இந்த மேல்முறையீடு தொடர்பில் அரசு தரப்பு வழக்கறிஞரும், எதிர்தரப்பு வழக்கறிஞரும் வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு முன்னதாகவே தங்கள் வாதத் தொகுப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







