கோலாலம்பூர், செப்டம்பர்.07-
பி40 பிரிவினருக்கு வழங்கப்படும் 'சாரா' உதவித் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும், புதிய சிக்கல் ஒன்று தலைதூக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மக்கள் வாங்கும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, உள்நாட்டு அரிசி சில கடைகளில் முற்றிலுமாக விற்றுத் தீர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தச் சிக்கலைத் தீர்க்க, மக்கள் என்னென்ன பொருட்களை அதிகம் வாங்குகிறார்கள் என்பதை, 'சாரா' திட்டத்தின் தரவுகளைக் கொண்டு கண்காணிக்க வேண்டுமென தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார். 'அதிகம் தேவைப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.








