May 20, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் HALAL சான்றிதழ் கொண்டிருக்கும் உணவகங்கள் அதிகரிப்பு !
தற்போதைய செய்திகள்

பினாங்கில் HALAL சான்றிதழ் கொண்டிருக்கும் உணவகங்கள் அதிகரிப்பு !

Share:

கடந்த முன்று மாதங்களாக பினாங்கு மாநிலத்தில் HALAL சான்றிதழ் கொண்ட உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர் முஹமாட் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் 1,729 ஆக இருந்த அவ்வெண்ணிக்கை 2023 அக்டோபர் வரையில் 4,973 ஆக உயர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

வியாபாரிகளும் தொழில்முனைவர்களும் தங்களின் வணிகப் பொருட்கள் ஹலால் சான்றிதழ் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் எனும் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதே, அந்த எண்ணிக்கை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது என அவர் மேலும் சொன்னார்.

ஹலால் அங்கீகாரத்தைப் பற்றி கூடுதல் விவரங்களோ ஆலோசனைகளோ கோர விரும்புகிறவர்கள் அதன் கிளைகளுக்கு நேரடியாகச் சென்றும் தொலைபேசி வாயிலாக அழைத்தும் பெற்றுக் கொள்ளலாம் என டத்தோ டாக்டர் முஹமாட் அப்துல் ஹமிட் கூறினார்.

Related News