Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தாலிபான்கள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ந்து போன அரசியல் கட்சிகள்.. போச்சு
தற்போதைய செய்திகள்

தாலிபான்கள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ந்து போன அரசியல் கட்சிகள்.. போச்சு

Share:

ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் வசம் சென்றதில் இருந்தே அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு வெளியேறியதையடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததுமே, அங்கு கொடூரமான கட்டுப்பாடுகளை கொண்டு வருவார்கள் என அஞ்சிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ஆனால், தங்களது முந்தைய ஆட்சி காலம் போல தற்போதைய ஆட்சி இருக்காது என்று தாலிபான்கள் உத்தரவாதம் கொடுத்தனர்.

ஆனாலும், தாலிபான்களின் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் உத்தரவாதத்தை காற்றில் பறக்க விட்ட தாலிபான்கள், பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக பெண்களுக்கு எதிர்பார்த்தது போலவே, ஆப்கானிஸ்தானில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.

அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்கவும் அனுமதி அளிக்கவில்லை. ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, தங்கள் சிகிச்சைக்காக, ஆண் டாக்டரை பெண்கள் அணுகக்கூடாது என்று அடுத்த உத்தரவை பிறப்பித்தது தாலிபன் அரசு.. இப்படி ஏகத்திற்கும் கட்டுப்பாடுகளை கொண்டு வரும் தாலிபான், தற்போது பிறப்பித்துள்ள ஒரு உத்தரவு அந்த நாட்டின் அரசியல் கட்சிகளை அதிர வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தாலிபான்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

Related News