கோலாலம்பூர், நவம்பர்.18-
மருத்துவப் பரிசோதனைக்காக பிரிட்டனுக்குச் செல்வதற்கு முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ முகைதீன் யாசினுக்குக் கடப்பிதழைத் தற்காலிகமாக ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தமக்கு ஏற்பட்ட கணைய புற்றுநோய் குறித்து மருத்துவ பரிசோதனைச் செய்து கொள்வதற்கு பிரிட்டனுக்குச் செல்ல வேண்டிய அவசியம் தொடர்பில் முகைதீன் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி நூர் ருவேனா முகமட் நுர்டின் அனுமதி அளித்தார்.
78 வயதான முகைதீன், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வரை தனது கடப்பிதழை வைத்திருப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.








