Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஆடவர் மீது கொலை குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவர் மீது கொலை குற்றச்சாட்டு

ஈப்போ, நவ. 15-


பேரா, ஈப்போ, தாமான் புத்ரி லிங்டோங்கான் பந்தாங்கில் தனது அத்தையை கொலை செய்ததாக ஆடவர் ஒருவர் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

21 வயது லீ ஹாய் யீ என்ற அந்த இளைஞர், கடந்த நம்பர் 10 ஆம் தேதி காலை 8.25 மணியளவில் 54 வயதுடைய தனது அத்தை லீ ஹுவாய் திங் என்பவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடி பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை அல்லது மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →