மலேசியாவின் முதல் லிட்டோரல் காம்பேட் ஷிப் எனப்படும் எல்சிஎஸ் 1 போர்க்கப்பலை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் ஒப்படைக்க முடியும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எல்சிஎஸ் 1 இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் நான்கு மாதங்கள் தாமதமாகியுள்ளது.
எல்சிஎஸ் 1றைக் கட்டும் லுமூட் நேவல் ஷிப்யார்ட் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம், கப்பலில் குழாய் அமைத்தல், மின்கம்பிகள் பொருத்துதல், உபகரணங்களை நிறுவுதல் மற்றும் ஆய்வு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சோதனை மற்றும் செயல்பாட்டுக்கான பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
எல்சிஎஸ் 1 போர்க்கப்பல் ஏப்ரல் 2027-இல் ஒப்படைக்கப்படும் என்று புதிய காலக்கெடுவை நிறுவனம் வழங்கியுள்ளதாக முஹமட் காலிட் கூறினார்.








