Jul 29, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீர்-ருக்கு 99 வயது
தற்போதைய செய்திகள்

துன் மகாதீர்-ருக்கு 99 வயது

Share:

ஷா அலாம், ஜூலை 10-

மலேசிய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்துவந்த துன் டாக்டர் DR மகாதீர் மொஹமட், இன்றுடன் 99-ஆவது வயதை எட்டியுள்ளார்.

1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி, கெடா, அலோர் ஸ்தார் , கம்போங் செபேறாங் பேராக்-க்கில் பிறந்திருந்த அவர், நாட்டின் உயரிய பதவியான பிரதமர் பொறுப்பை இருமுறை வகித்த பெருமையைக் கொண்டுள்ளார்.

1981ஆம் ஆம் ஆண்டில் பிரதமர் பொறுப்பை முதன் முதலில் ஏற்றிருந்த மகாதீர், 22 ஆண்டு கால சேவைக்கு பிறகு, 2003ஆம் ஆண்டில் அப்பொறுப்பிலிருந்து விலகினார்.

அதன் பின்னர், 2018ஆம் ஆண்டு மே மாதம், தேசிய முன்னணியிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை, பக்காத்தான் ஹாராப்பான் கைப்பற்றிய போது, இரண்டாம் முறையாக பிரதமர் பொறுப்பை அவர் ஏற்றார்.

நாட்டின் வரலாற்றில் அதிக காலம் பிரதமர் பொறுப்பை வகித்த பெருமையுடன் உலகிலேயே அதிக வயதில் அப்பொறுப்பை ஏற்ற பெருமிதத்தையும் மகாதீர் கொண்டுள்ளார்.

ஆயினும், 2020ஆம் ஆண்டு, பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததிலிருந்து மகாதீர்-ரின் அரசியல் செல்வாக்கும் சரிய தொடங்கியது.

நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில், லங்கவி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, வைப்புத் தொகையை இழந்தது, மகாதீர்-ரின் அரசியல் பயணத்தில் கருப்பு புள்ளியாக அமைந்துவிட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்