Mar 23, 2026
Thisaigal NewsYouTube
தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு  மேலும் 21 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
தற்போதைய செய்திகள்

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு மேலும் 21 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

Share:

சுங்கை பெட்டானி, ஜுன் 28-

கெடா, பக்கார் அரங்க் தொழிற்பேட்டையில் உள்ள ரப்பர் கையுறை தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் மேலும் 21 தொழிலாளர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் ஆகியவற்றுக்கு ஆளான அவர்கள் சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த ரப்பர் கையுறை தயாரிப்புத் தொழிற்சாலையைச் சேர்ந்த 17 தொழிலாளர்கள் கண் எரிச்சல், மயக்கம் போன்ற உபாதைக்கு ஆளான நிலையில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திலேயே மேலும் 21 பேர் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுங்கை பெட்டானி, ஆபத்து அவசர செயலாக்கப்பிரிவின் கொமந்தர் ஜோஹரி பார் அஸ்வர் தெரிவித்துள்ளார்.

Related News