கோலாலம்பூர், செப்டம்பர்.23-
நிறுத்தப்பட்டு இருந்த வாகனம் ஒன்றில் வீசிய துர்நாற்றம், அக்காருக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்டுப்பிடிக்க வழிவகுத்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் கோம்பாக், Diomand Square வர்த்தக மையத்தில் Four Wheel Drive வாகனத்தில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த வாகனம் கடந்த 2 நாட்களாக நகராமல் நிறுத்தப்பட்ட இடத்திலேயே இருந்ததாக அந்த வர்த்தகப் பகுதியின் மேற்பார்வையாளர் ஒருவர் சாட்சியம் அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்தப் பெண்ணின் மரணத்தில் குற்றத்தன்மை இருப்பது அறிய முடியவில்லை. எனினும் சடலம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் உடலில் நடத்தப்படும் சோதனைக்கு பிறகே மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்று ஏசிபி முகமட் லாஸிம் தெரிவித்தார்.








