அலோர் ஸ்டார், நவம்பர்.10-
மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதியில் 100 சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து, கடலில் மூழ்கியதில், இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் இந்த மீட்பு நடவடிக்கையில், இதுவரை 13 சட்டவிரோதக் குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளதாக கெடா மற்றும் பெர்லிஸ் மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இயக்குநர் ரொம்லி முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
நேற்று சுமார் 300 சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த 3 படகுகளில் ஒன்று, பூலாவ் தருதாவ் அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 100 பேர் கடலில் மூழ்கினர்.
இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.








