Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சபா வெள்ளம்: மூன்று கிராமங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

சபா வெள்ளம்: மூன்று கிராமங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன

Share:

கோத்தா கினபாலு, பிப்ரவரி.20-

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, சபா மாநில கிராமப்புறப் பகுதிகளில் மூன்று இடங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கோத்தா மாருடு, பித்தாஸ் மற்றும் பைத்தான் ஆகிய மூன்று பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

காலை 9 மணி நிலவரப்படி, வெளியேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கோத்தா மாருடு மற்றும் பித்தாஸ் பகுதிகளில் மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மீட்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, சண்டாகானில் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related News