Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஏஐ: கோபிந்த் சிங் டியோவின் பிரம்மாண்ட அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஏஐ: கோபிந்த் சிங் டியோவின் பிரம்மாண்ட அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், ஜூலை.27-

மலேசியாவின் வணிகங்களும் தொழிலாளர்களும் செயற்கை நுண்ணறிவைப் பரவலாக ஏற்றுக் கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் 113.4 பில்லியன் அமெரிக்க டாலர் உற்பத்தித் திறனை அடையும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிரடியாக அறிவித்துள்ளார். ஷங்ஹாயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பேசிய அவர், ஏஐ திறனை நன்மைக்கான சக்தியாக நிலை நிறுத்த உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

மலேசியா ஏற்கனவே தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகத்தை நிறுவியுள்ளதோடு, 2025 ஆசியான் தலைவராக ஆசியான் ஏஐ பாதுகாப்பு வலையமைப்பை முன்னெடுத்து, வட்டார நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். ஏஐ உலகளாவிய வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்ற அவரது உரை, தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தூண்டியுள்ளது.

Related News