Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு சிலிக்கோன் வடிவமைப்புத் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு சிலிக்கோன் வடிவமைப்புத் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

பினாங்கு, டிச. 7-


பினாங்கு மாநில சிலிக்கோன் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் ஒருங்கிணைந்த ஐ.சி. வடிவமைப்புத்துறை வளர்ச்சியின் மூலம் பொருளாதார வளர்ச்சியை உந்தச்செய்யும் நோக்கத்தை இத்திட்டம் கொண்டிருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று பினாங்கு, பாயான் லெப்பாஸில் ஒரு ஹோட்டலில் நடைபெற்ற ஜிபிஎஸ் தெக் ஸ்பேஸ் சிலிக்கோன் ஆய்வு மையத் திட்டத்தை தொடக்கிவைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

இத்திட்டம் தொடர்பில் இன்வெஸ்ட்பினாங் நிறுவனத்திற்கும் , இத்திட்டத்தில் கூட்டு சகாக்களாக இருக்கின்ற நிறுவனங்களுக்கும் இடையில் கருத்திணக்க ஒப்பந்தத்தின் கையெழுத்திடும் சடங்கு பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →