தன்னை மதிக்கவில்லை என்று காரணம் காட்டிக் கொண்டு, ஐந்தாம் படிநிலை மாணவர் ஒருவர் மூன்றாம் படிநிலை மாணவரைத் தாக்கிய சம்பவம் தாமான் மெலாவத்தி இடைநிலைப் பள்ளியில் நடந்துள்ளது. காலை 8.30 மணியளவில் பள்ளி மாடிப் படியில் அந்த மூன்றாம் படிவ மாணவனின் கழுத்தை நெரித்ததுடன் அவன் மார்ப்பில் குத்தி காலால் உதைத்து காயங்களை விளைவித்து உள்ளதால் அந்த ஐந்தாம் படிவ மாணவனைப் போலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இண்டாகிராமி பக்கத்தில் அந்த மாணவர் அடித்தக் காட்சி காணொலியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த காணொலியில், மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்வாயா என கூறிக் கொண்டு அந்த 3ஆம் படிவம் மாணவனை அடிக்கும் காட்சி பதிவாகி உள்ளது. 5 பேர் கொண்ட கும்பலுடன் அந்த மூன்றாம் படிவம் மாணவன் தாக்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்பாங் ஜெயா வட்டார போலீஸ் தலைவர் எ.சி.பி. முகமது ஃபாரூக் ஈஷாக் தெரிவித்தார்.








