Oct 15, 2026
Thisaigal NewsYouTube

விண்ணில் பாய்ந்தது UZMA SAT-1 விண்கலம் – தேசிய விண்வெளி கொள்கையின் வெற்றியில் ஒரு மைல்கல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜன.15-

Uzma Berhad நிறுவனம் தனது முதல் தொலை உணர்வு செயற்கைக்கோளான UZMA SAT-1 ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது, இது தேசிய விண்வெளி கொள்கை 2030 இன் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தற்காப்பு, தேசிய பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மேலாண்மை போன்ற துறைகளில் பூமியை கண்காணிப்பதை மேம்படுத்த இந்த செயற்கைக்கோள் உதவும். இது மலேசியாவின் விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காற்றும் என MOSTI எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளர்து.

UZMA SAT-1 செயற்கைக்கோள் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் சுமார் 500 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இஃது அதிநவீன கேமராக்களையும் சென்சார்களையும் கொண்டுள்ளதால், வாகனங்கள் போன்ற சிறிய பொருட்களையும் துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள் ஏவுதல், மலேசியாவின் விண்வெளி தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்கான ஒரு தொடக்கமாகும் என MOSTI குறிப்பிட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →