Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கருவூலப் பணியாளர்களை பாராட்டினார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

கருவூலப் பணியாளர்களை பாராட்டினார் பிரதமர் அன்வார்

Share:

நாளை அக்டோபர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் 24 மணி நேரமே எஞ்சியரிக்கும் வேளையில் பட்ஜெட்டிற்கான இறுதி கட்ட ஆயத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிதி அமைச்சின் கரூவூலப்பணியாளர்களை பிரதமர் அன்வார் வெகுவாக பாராட்டினார்.

பலர் வீட்டிற்குகூட செல்லாமல் கரூவூலத்திலேயே தங்கி, பட்ஜெட் தயாரிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்னும் சிலர், பிள்ளைககளின் பிறந்த தின கொண்டாட்டத்தில்கூட கலந்து கொள்ள முடியாமல் கரூவூலப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News