கோலாலம்பூர், பிப்ரவரி.15-
மலேசியாவில் கொண்டாடப்படவுள்ள சீனப் புத்தாண்டையொட்டி, பாதுகாப்பு கருதி Pop-Pop பட்டாசுக்கும் Happy Boom பட்டாசுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகக் கோலாலம்பூர் காவற்படைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார். இவற்றை விற்பனை செய்வதற்கு முறையான அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், தடையை மீறி பிற வகை பட்டாசுகளை வைத்திருப்பவர்களோ அல்லது விற்பனை செய்பவர்களோ சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் பட்டாசு வெடித்துப் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








