2015-ஆம் ஆண்டு தொடங்கி 2025-ஆம் ஆண்டு வரைக்குமான மலேசிய உயர்கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், வாழ்நாள் முழுவதும் கல்வி பெறுதல் என்ற PSH திட்டம், மலேசியர்கள் உயர் வருமானதைப் ஈட்டுவதற்கு ஏற்ற அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேலைச் சந்தையில் தங்களை இன்னமும் ஈடுப்படுத்திக்கொள்ளாத நபர்களின் திறன்களை வளர்க்க இத்திட்டம் உதவுவதோடு, இளம் வயதினர் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் இந்த அரிய வாய்ப்பை வழங்கி வருகிறது.
வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்திக்கொள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் வாயிலாக, கல்வியைத் தொடர்வதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. என்பதுடன் அதற்கு ஏற்ற பாடத்திட்டத்தை உள்ளடக்கிய கற்றல் அனுபவத்தை பெறும் ஒரு களமாக இந்த தொலைதூர கல்வித் திட்டம் திகழ்கிறது.
மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தின் தொலைதூர கல்வித் திட்டம் வாயிலாக கூடுதல் அனுபவமும் திறமையும் வாய்ந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக்கெள்ள முடியும் என்று கருதும் முதலாளிமார்கள் இதனை சிறந்த முன்னெடுப்பாக நோக்குகின்றனர்.

Related News

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்


