Oct 15, 2026
Thisaigal NewsYouTube

வழிபறி கொள்ளையனை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

தெலுக் இந்தான், ஜன.30-

தெலுக் இந்தான், ஜாலான் சுல்தான் அப்துல்லா, ஹுவர் பார்க்கில் ஒரு வீட்டின் வாசல்படியில் பூ வியாபாரியான மாது ஒருவரை மடக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

நேற்று காலை 8.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 65 வயது மாதுவிடமிருந்து தாங்கள் போலீஸ் புகார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தனது வீட்டின் வாசற்படியில் பூமாலைகளை விற்பனை செய்வதற்காக அவற்றை தொடுத்துக்கொண்டு இருந்த அந்த மாதுவை நோக்கி, வாடிக்கையாளரைப் போல் பாவனை செய்த தலைக்கவசம் அணிந்திருந்த அந்த ஆடவர், திடீரென்று அந்தப் பெண்ணை மடக்கி, சங்கிலியைப் பறித்துத்துள்ளார்.

அந்த மாது போட்ட கூச்சலினால் அவரை கீழே தள்ளிவிட்டு தங்கச் சங்கிலியை பறித்துள்ளான்.

தனது தாயாரின் கூச்சல் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்து ஓடி வந்த அந்த மாதுவின் மகன், கொள்ளையனை துரத்திக்கொண்டு ஓடியப் போது அவன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளான் என்று அந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவின் மூலம் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் அந்த மூதாட்டியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஏசிபி அகமட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்