சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக் தற்போது ஒமான் அரசாங்கத்தின் முழு பாதுகாப்பில் இருப்பதாக அவரின் மலேசிய வழக்கறிஞர் Akberdin Abdul Kader தெரிவித்துள்ளார். தலைநகர் Muscat இல் நேற்று முதல் நாள் சமய பேருரையை ஜாஹிர் வெற்றிகரமாக நிகழ்த்தியிருப்பதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் ஒமான் அரசாங்கத்தின் பிரமுகர் என்பதால் அவருக்கு முழு பாதுகாப்பை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியிருப்பதாக Akberdin விவரித்தார்.
ஒமானில் ஜாஹிர் நாயக் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுவது எல்லாம் இந்தியாவின் செய்தி நிறுவனங்கள் கட்டவிழ்த்துவிட்ட கதையாகும் என்று தமக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில் அந்த சமயப் போதகர் தெரிவித்துள்ளார் என்று மலேசிய தகவல் சாதனங்களுக்கு Akberdin விளக்கினார்.








