Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பதவி விலகல் நெருக்குதல்: முழு அறிக்கையையும் படியுங்கள் என இங்கா கோர் மிங் சாடல்
தற்போதைய செய்திகள்

பதவி விலகல் நெருக்குதல்: முழு அறிக்கையையும் படியுங்கள் என இங்கா கோர் மிங் சாடல்

Share:

நாட்டின் நீதித்துறை அமைப்பின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்காக, அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகத் தமது நிலைப்பாட்டை வீடமைப்பும், ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது கொள்கை ரீதியான முடிவே தவிர, தனிப்பட்ட விஷயம் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

தம்மைப் பதவி விலகுமாறு சில தரப்பினர் நெருக்குதல் கொடுப்பது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள ஙா கோர் மிங், 'ஓரியண்டல் டெய்லி' நாளிதழுக்குத் தாம் அளித்த முழுமையான நேர்காணலைப் படித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மலாயா உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராகத் தமது நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1எம்.டி.பி. விவகாரத்தில் நாட்டுக்கு 51.4 பில்லியன் ரிங்கிட் கடனை ஏற்படுத்திய டத்தோ ஸ்ரீ நஜிப் முறையான தண்டனையின்றி விடுவிக்கப்பட்டால், அது நீதித்துறையின் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும் என்றும், அதனாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் ஙா கோர் மிங் விளக்கியுள்ளார்.

Related News