Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சுல்தானை அவமதித்த முகநூல் பயனர் – போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் சுல்தானை அவமதித்த முகநூல் பயனர் – போலீஸ் விசாரணை

Share:

மேன்மைத் தங்கிய சிலாங்கூர் சுல்தானைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டதாக கூறப்படும் 'ஹுவாயன் தி பியூர்லேண்ட் லேர்னிங் சென்டர்' எனும் முகநூல் கணக்கின் உரிமையாளர் மீது போலீஸ் விசாரணை நடத்த தொடங்கியுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 21 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக 21 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை சிஐடி இயக்குனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இந்த வழக்கு நிந்தனைச் சட்டம், குற்றவிசயல் சட்டம் மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

Related News