சுங்கை பூலோவில் பேரங்காடி மையம் ஒன்றில மாணவி ஒருவரை மானபங்கம் செய்த அந்நிய நாட்டு ஆடவர், கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி, கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் விளக்கம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி மாணவியின் பெற்றோர் சங்கைபூலோ போலீஸ் நிலையத்தில் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக டத்தோ ஹுசைன் ஓமர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பேரங்காடி மையத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவியிடம் ஆபாச சேட்டைப் புரிந்த அந்நிய ஆடவரின் செயல் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த உயர் போலீஸ் அதிகாரி மேற்கண்ட விளக்கத்தை தந்துள்ளார்.








