கோலாலம்பூர், ஜனவரி.14-
கோலாலம்பூர், டாமன்சாரா ஹைட்ஸில் (Damansara Heights) உள்ள ஹெல்ப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து விரிவான மற்றும் ஆழமான விசாரணை நடத்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் உட்பட அனைவரின் பாதுகாப்பையும் உறுதிச் செய்வது மிக முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தச் சம்பவத்தில் மரணம் அடைந்த மூன்றாம் ஆண்டு இயந்திரப் பொறியியல் மாணவரான 24 வயது சூ யு ஜுவான் குடும்பத்திற்கு பிரதமர் தமது ஆழ்ந்த வருத்ததையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.








