மலாக்கா, டூரியான் துங்கலில் ஜி. லோகேஸ்வரன், எம். புஸ்பநாதன், எம். புவனேஸ்வரன் ஆகிய மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கடந்த 8 மாதங்களாக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து சட்டத்துறை தலைவர் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவரும், இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 24-ல் நடந்த இச்சம்பவத்தை, டிசம்பரிலேயே போதலீஸ் துறை 'கொலை வழக்கு' பிரிவு 302 என மறுவகைப்படுத்திய போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படாதது ஏன் என்று கோபிந்த் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் உள்ள நிலையில், இந்தத் தாமதம் சாட்சியங்களை பலவீனப்படுத்தும் எனக் கவலை தெரிவித்த கோபிந்த் சிங், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க இவிவகாரத்தை நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் நேரில் எழுப்ப உள்ளதாகத் தெரிவித்தார்.








