கூலிம், நவம்பர்.05-
தனது காதலர் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததால், மனமுடைந்த 30 வயது பெண், தனது 4 வயது பெண் குழந்தையைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கெடா மாநிலம் கூலிம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 11.05 மணியளவில், கூலிம் தாமான் பேரா என்ற இடத்தில் நடந்த இச்சம்பவத்தின் போது, அப்பெண்ணின் 7 வயது ஆண் குழந்தை உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில், மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அப்பெண்ணின் சடலைத்தைக் கைப்பற்றிய போலீசார், அருகில் 4 வயது பெண் குழந்தையின் சடலத்தையும் கண்டறிந்துள்ளனர்.
தனது தாயாரால் தூக்கில் தொடங்க விடப்பட்ட 7 வயது சிறுவன், மின்விசிறி கீழே விழுந்ததால், கழுத்தில் காயங்களுடன் உயிர் பிழைத்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம், குற்றவியல் சட்டம், பிரிவு 302-ன் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும் ஸுல்கிஃப்லி அஸிஸான் குறிப்பிட்டுள்ளார்.








