Oct 18, 2026
Thisaigal NewsYouTube

முனியம்மா கடந்த 4 நாட்களாக வீடு திரும்பவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முனியம்மா கடந்த 4 நாட்களாக வீடு திரும்பவில்லை

பொண்டியன், செப்டம்பர் 30-

ஜோகூர், பொண்டியன் - னைச் சேர்ந்த முனியம்மா த/பெ வெள்ளை என்பவர் கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

61 வயது முனியம்மா, காணாதது குறித்து கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பிற்பகல் 2.21 மணியளவில் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தாங்கள் புகார் பெற்று இருப்பதாக பொண்டியன் மாவட்ட போலீஸ் தலைவர் இன்ஸ்பெக்டர் அகமது ஷா அப்துல் ரஷீத் தெரிவித்தார்.

முனியம்மாவை ஆகக்கடைசியாக குடும்ப உறுப்பினர்கள் பார்த்தது கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி காலை 7 மணியளவில் எண். 84, அமன் ரம்பா,பொண்டியன் என்ற முகவரியில் உள்ள அவரின் வீட்டில் ஆகும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இன்ஸ்பெக்டர் அகமது குறிப்பிட்டார்.

160 செண்டிமீட்டர் உயரம், 80 கிலே எடை கொண்ட முனியம்மாவைப் பார்த்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஜோகூர்,பெர்மாய் மன நல மருத்துவமனையில் முனியம்மா சிகிச்சைப் பெற்று வந்தாகவும் தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவரான முனியம்மா குறித்து தகவல் அளிக்கமாறு அவரின் குடும்பத்தினர், பொது மக்களின் உதவியை நாடியுள்ளதாக இன்ஸ்பெக்டர் அகமது குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →