Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் போலீசார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் போலீசார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றது

பொந்தியான், ஜூன்.26-

போலீசாரின் உத்தரவையும் மீறி காரைச் செலுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை விரட்டிச் செல்லப்பட்டு, வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் ஜோகூர், பொந்தியான், கம்போங் ஶ்ரீ புனியான், ஜாலான் பாரிட் ஹஜி ஒத்மானில் நிகழ்ந்தது.

இதில் இந்தோனேசியர்களான 32 வயது கணவன், 24 வயது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 2 வயது மகன் மீட்கப்பட்டான். அவர்களின் காரைப் போலீசார் பரிசோதனை செய்ததில் 8.58 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஷோஃபி தையிப் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →