Oct 10, 2026
Thisaigal NewsYouTube

காதலியின் மகளை மானபங்கம் புரிந்த இந்தியப் பிரஜைக்கு 6 ஆண்டு சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காதலியின் மகளை மானபங்கம் புரிந்த இந்தியப் பிரஜைக்கு 6 ஆண்டு சிறை

மலாக்கா, ஜூன்.03-

தனது காதலியின் மகளை மானபங்கம் புரிந்த குற்றத்திற்காக ஓர் இந்தியப் பிரஜைக்கு மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் மூன்று பிரம்படித் தண்டனை விதிக்க தீர்ப்பளித்தது.

30 வயது S. சக்திவேல் என்ற அந்த இந்தியப் பிரஜை, குற்றச்சாட்டை மறுத்து வந்த நிலையில், இன்று தனது வாக்குமூலத்தை மாற்றி, குற்றத்தை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி ரோஹாதூல் அக்மார் அப்துல்லா தீர்ப்பளித்தார்.

சக்திவேல், கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் மலாக்கா, தாமான் கெனாங்கா செக்‌ஷன் 3றில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தனது காதலியின் 11 வயது மகளிடம் பாலியல் சேட்டை புரிந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவேல், அவரின் காதலி மற்றும் அந்தப் பெண்ணின் மூன்று பிள்ளைகள் மலாக்கா கிளேபாங்கில் கடற்கரையைச் சுற்றிப் பார்த்து விட்டு வீடு திரும்பிய போது, அன்றிரவு வீட்டில் தங்கிய வேளையில் காதலியின் 11 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை