ஷா ஆலாம், நவம்பர்.24-
அடை மழையைத் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டோடியதால் ஷா ஆலாம் வட்டாரத்தில் 4 பிரதானச் சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டன. அந்த நான்குச் சாலைகளில் தீவு போல் நீர் சூழ்ந்து கொண்டதால் வாகனமோட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போலீசாரின் ஆலோசனைக்கு ஏற்ப 4 சாலைகளும் மூடப்பட்டதாக ஷா ஆலாம் மாநகர் மன்றம் தெரிவித்தது.
செக்ஷன் 23 க்கு செல்லும் செக்ஷன் 19, செக்ஷன் 24, பெர்சியாரான் ஜுப்லி பேரா மற்றும் பெர்சியாரான் பெருசாஹான் ஆகியவையே மூடப்பட்டச் சாலைகளாகும். திடீர் வெள்ளத்தில் வாகனமோட்டிகள் சிக்கிக் கொள்ளும் பேராபத்து உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.








