Oct 2, 2026
Thisaigal NewsYouTube

வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு வலை வீச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு வலை வீச்சு

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.08-

மலாக்காவில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் சார்பில் ஆஜராகியுள்ள முன்னணி வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாம்சுடின் மாமாட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபரின் சமூக ஊடகக் கணக்கைக் கண்டுபிடிப்பதற்கு போலீசார், எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் உதவியை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் ராஜேஸிற்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பந்தப்பட் நபரை அடையாளம் காண்பதற்கு அதற்கான விண்ணப்பத்தை போலீசார், எம்சிஎம்சி-யிடம் சமர்ப்பித்துள்ளதாக ஏசிபி ஷாம்சுடின் குறிப்பிட்டார்.

விண்ணப்பத்திற்கானப் பதிலுக்காகப் போலீசார் காத்திருக்கும் வேளையில் புகார்தாரரான ராஜேசிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →