ரூமா மெஸ்ரா ரக்கியாட் எனப்படும், அரசாங்கத்தின் மக்கள் நட்புறவு வீடமைப்பு திட்டத்தில், வீடு வாங்குவதற்கு அரசாங்கம் நிர்ணயித்திருந்த புதிய தகுதிபாட்டில், 5 ஆயிரம் வெள்ளி வருமானம் பெறுகின்றவர்களும் அவ்வீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என்று ஊராட்சித் துறை மேம்பாட்டு அமைச்சர் ங கோர் மிங் தெரிவித்துள்ளார்.
தற்போது குடும்பத்தின் மொத்த வருமானம் மூவாயிரம் வெள்ளி பெறுகின்றவர்கள் மட்டுமே ரூமா மெஸ்ரா ரக்கியாட் வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
எனினும், அந்த மூவாயிரம் வெள்ளி தகுதிபாடு, 5 ஆயிரம் வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டிற்கான ரூமா மெஸ்ரா ரக்கியாட் திட்டத்தின் கீழ் ஆறு வகையான வடிவமைப்பைக் கொண்ட வீடுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது என்று அமைச்சர் ங கோர் மிங் விளக்கினார்.
மக்கள் தங்களுக்குப் பொறுத்தமான வீட்டு வடிவமைப்பைத் தேர்வு செய்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


