அரச மலேசிய இராணுவப்படைக்கு சொந்தமான பீச்க்ராஃப்ட் B 200T ரக விமானம், இன்று மதியம் சுபாங், சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்தில் அவரச தரையிறக்கத்திற்கு இலக்கானது.
இதில் விமானத்தில் இருந்த நான்கு வீரர்களும் எவ்வித காயமின்றி உயிர்தப்பினர் என்று அரச மலேசிய இராணுவப் படையின் பொது உறவுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 11. 27 மணியளவில் சுபாங் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட அந்த இராணுவ விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.








