Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ள வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ள வேண்டாம்

Share:

மெர்சிங், செப்டம்பர்.13-

பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ளாமல் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லீம் பெரும்பான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால், மலேசியாவில் மக்களிடையே ஒற்றுமை உறுதிச் செய்யப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இதுவே தேசிய ஒற்றுமையின் அடிப்படை என்றும் இது எல்லா காலங்களிலும் நிலை நிறுத்தப்பட்டு வந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் ஒற்றுமையை உறுதிப்படுத்த நாம் விரும்பினால் பெரும்பான்மை மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லீம்களைக் கொண்ட இந்த நாடு, பிற இன மக்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். குறிப்பாகச் சீனர்கள், இந்தியர்கள், ஓராங் அஸ்லி, டயாக்- கடாஸான் ஆகியோரின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வெந்ண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இன்று மெர்சிங்கில் ஜோகூர் மாநில சாரணர் இயக்கத்துடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

Related News