Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கிளந்தான் அரச விருது வரலாற்றில் புதிய மைல்கல்: 101 ஆண்டுகளில் முதல் இந்தியராக உயரிய ‘டத்தோ’ விருது பெற்றார் டத்தோ ஸ்ரீ ரமணன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளந்தான் அரச விருது வரலாற்றில் புதிய மைல்கல்: 101 ஆண்டுகளில் முதல் இந்தியராக உயரிய ‘டத்தோ’ விருது பெற்றார் டத்தோ ஸ்ரீ ரமணன்

கிளந்தான் மாநில சுல்தான் ஐந்தாம் முகம்மது அவர்களின் 57-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று இஸ்தானா பாலாய் பெசாரில் நடைபெற்ற பிரம்மாண்ட அரச விருதுகள் வழங்கும் நிகழ்வில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், விருதுப் பெறுநர்களின் முன்னணி பட்டியலில் இடம்பெற்று, மாநிலத்தின் முதல் நிலை உயரிய ‘செரி படுக்கா ஜிவா மகோத்தா கிளாந்தான்’ எனும் எஸ்.ஜெ.எம்.கே. அந்தஸ்தை தாங்கிய உயரிய ‘டத்தோ’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

1925 ஆம் ஆண்டு சுல்தான் இஸ்மாயில் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘எஸ்.ஜெ.எம்.கே’ விருது, கிளந்தான் மாநிலத்தின் மிக உயரிய - மதிப்புமிக்க அரச கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விருதைப் பெற்றவர்களுக்கு ‘டத்தோ’ பட்டம் வழங்கப்படுவதுடன், ஒரே நேரத்தில் 50 பேருக்கு மட்டுமே இந்த விருதை வழங்க முடியும் என்ற வரம்பும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், ‘எஸ்.ஜெ.எம்.கே’ விருது அறிமுகப்படுத்தப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த முதல் நபராக டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த உயரிய கௌரவத்தைப் பெற்றிருப்பது கிளந்தான் மாநில விருது வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான அரச விருதுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்வில் மொத்தம் 767 பேர் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் 45 பேருக்கு ‘டத்தோ’ பட்டம் வழங்கப்பட்டது. அரசியல், நிர்வாகம், பாதுகாப்பு, கல்வி, தொழில்துறை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மாநிலத்தின் உயரிய அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன.

‘எஸ்.ஜெ.எம்.கே’ விருதைப் பெற்ற மற்ற முக்கிய பிரமுகர்களில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசூத்தியோன் இஸ்மாயில், சில்க்வே குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ டானியார் கெசிக்வ்பெவ், லு மெர்சியர்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ லியோன் எமில் லெ'மெர்சியர் ஆகியோரும் இடம்பெற்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை