பாயான் லெப்பாஸ், ஆகஸ்ட்.24-
பினாங்கு கடல் பகுதியில் கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 3 இலட்சத்து 52 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடல்சார் காவல் படை மீட்டெடுத்தது. காவல் படை துரத்தி வந்த போது, ஒரு படகு விளக்குகளை அணைத்து வேகமாகத் தப்பிச் சென்றது. அப்போது அந்தப் படகிலிருந்து சில பொருள்கள் கடலில் வீசப்படுவதைக் கண்ட காவல் படையினர், சுமார் 11.19 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்களைக் கண்டுபிடித்ததாக கடல்சார் காவல் படையின் 1 ஆம் வட்டாரத் தளபதி அஸிஸ்டன் கமிஷனர் ருஸ்லி சீ அரி தெரிவித்தார். தப்பிய படகைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








