Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துங்கள் !
தற்போதைய செய்திகள்

மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துங்கள் !

Share:

பினாங்கு மாநிலத்தில் உள்ள மக்களுடன் முதலில் கலந்தாலோசிக்காமல் அவர்களின் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவது என்பது அவர்களைக் கொடுமைப்படுத்தும் செயலாகும். அதனை பினாங்கு மாநில அரசாங்கம் நிறுத்த வேண்டும் என மலேசிய மக்கள் கட்சியின் பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் இரவீந்தர் சிங் வலியுறுத்தினார்.

பினாங்கு, தெலுக் கும்பாரில், தொழிலாளர் தங்கும் விடுது கட்டப்பட பினாங்கு மாநில மேம்பாட்டுத் திட்டமிடல் செயற்குழு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இரவீந்தர் அவ்வாறு கருத்துரைத்துள்ளார்,

நகர, புறநகர் மேம்பாட்டுத் திட்டமிடல் சட்டம் 1976இன்படி, மேம்பாட்டுத் திட்டமிடல் என்பது மக்களுக்கானது, அவர்களின் நலனுக்கானது. எந்த மேம்பாட்டுத் திட்டம் அனுமதிக்கப்படும் முன்னர் அப்பகுதி மக்களுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என இரவீந்தர் கூறினார்.

அச்சட்டத்தின்படி, மாநில அரசு இவ்விவகாரத்தில் தனித்து முடிவெடுக்க முடியாது. இது அடாவடித்தனமான செயலாகும்.னைதற்குச் சான்றாக சுங்கை ஆராவில் நேர்ந்த மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான வழக்கை அவர் சுட்டிக் காட்டினார்.

மாநில அரசின் நட்வடிக்கையானது, மேம்ப்பாட்டாளர்களின் நலனையே முன்னிறுத்துவதாகத் தெரிகிறது. கட்டப்பட உள்ள தொழிலாளர் தங்கும் விடுதி, தொழில் துறையினரின் தேவையைப் பூர்த்தி செய்வதாக அமைகிறது என இரவீந்தர் சொன்னார்.

இந்த முன்னெடுப்பின் வாயிலாக, வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அப்பகுதி மக்களை மெல்ல மெல்ல அவ்விடத்தில் இருந்து காலி செய்யும் நடவடிக்கையை பினாங்கு மாநில அரசு கையாள்கிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் காலத்தில், 36 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வசிக்கும் நகரமாக தெலுக் கும்பார் உருமாறி விடும் எனவும், இத்திட்டம் தொடர்பில் ஏற்கெனவே மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தியதையும் மாநில அரசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ள வில்லை எனவும் இரவீந்தர் குறிப்பிட்டார்.

Related News