Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நியாயமான விலையில் கிடைப்பதற்கு சிறப்பு கிரேட் கோழி முட்டைகள்
தற்போதைய செய்திகள்

நியாயமான விலையில் கிடைப்பதற்கு சிறப்பு கிரேட் கோழி முட்டைகள்

Share:

கோலாலம்பூர், ஜூலை.31-

சந்தைகளில் நியாயமான விலையில் கோழி முட்டைகள் கிடைப்பதற்கு அத்தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பு கிரேட் முட்டைகளை அறிமுகப்படுத்தவிருக்கின்றனர் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை ஆகஸ்ட் முதல் தேதி அமலுக்கு வரவிருக்கும் கோழி முட்டைகளுக்கான உதவித் தொகைக் கட்டமைப்பு முறை மறுசீரமைக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து சந்தையில் கோழி முட்டைகளிள் விலைகளை நிலைப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வரும் அக்ரோ மடானி விவசாய விளைச்சல் பொருள் விற்பனை மற்றும் ரஹ்மா விற்பனை ஆகியவற்றின் வாயிலாக மக்கள் இவ்வகை கோழி முட்டைகளை நியாயமான விலையில் வாங்க முடியும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில் ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாயச் சந்தை வாரியம் மற்றும் தோட்டப் பண்ணை அமைப்பு வாரியம் ஆகியவற்றின் விற்பனை வளாகங்களிலும் இவ்வகை கோழி முட்டைகள் கிடைக்கும் என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News