ஈப்போ, நவம்பர்.27-
பேரா, முவாலிம் மாவட்டத்தில் பேராங்கில் வீற்றிருக்கும் குனுங் லியாங் மலையில் கடந்த அக்டோபர் மாதம் மலையேறி ஒருவர் மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மலைப்பகுதியில் மலையேறிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வன இலாகா மூலம் பேரா மாநில அரசு மேற்கொண்டு வருவதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் தெரிவித்துள்ளார்.
மலையேறும் பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பேரிடருக்கான ஆபத்து குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு நடவடிக்கையும் இதில் அடங்கும் என்று பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சராணி முகமட் பதில் அளித்தார்.
தவிர குனுங் லியாங் மலைப்பகுதியில் மலையேறிகளுக்கான கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக புந்தோ க் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் எழுப்பிய கேள்விக்கு மந்திரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.








