Sep 14, 2026
Thisaigal NewsYouTube
எல்லை தாண்டும் புகைமூட்டம்: இந்தோனேசியாவுடன் இணைந்து செயல்படும் மலேசியா
தற்போதைய செய்திகள்

எல்லை தாண்டும் புகைமூட்டம்: இந்தோனேசியாவுடன் இணைந்து செயல்படும் மலேசியா

Share:

இந்தோனேசியாவில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீ காரணமாக ஏற்பட்ட புகைமூட்டம் சரவாக் உள்ளிட்ட மலேசியப் பகுதிகளையும் பாதித்துள்ளது.

செரியான் பகுதியில் காற்று மாசுக் குறியீடு 195 வரை பதிவாகியுள்ள நிலையில், கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, கெடா மற்றும் பேராக் பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

புகைமூட்டத்தை சமாளிக்க இரு நாடுகளும் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன.

மேலும், எல்லைப் பகுதிகளில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசியாவுக்கு இந்தோனேசியா வான்வெளி அனுமதி வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவ மலேசியா தயாராக உள்ளது.

மேற்கு கலிமந்தான் பகுதியில் நிலைமை 2024-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் மோசமாக உள்ளதாக பொந்தியானாக் மலேசிய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள 577 மலேசியர்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதில் தூதரகம் கவனம் செலுத்தி வருகின்றது.

Related News

எல்லை தாண்டும் புகைமூட்டம்: இந்தோனேசியாவுடன் இணைந்து செயல... | Thisaigal News